மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

வன்னியர் பொதுச் சொத்து வாரியம்: ஈபிஎஸ் சை முந்திய சிவிஎஸ்

வன்னியர் பொதுச் சொத்து வாரியம்:  ஈபிஎஸ் சை முந்திய சிவிஎஸ்

வன்னியர் குல மக்களின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அரசாணையை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை நலத்துறை நேற்று (பிப்ரவரி 5) வெளியிட்டிருக்கிறது.

இதன்படி இனிமேல் வன்னிய சமுதாயத்தின் பொதுச் சொத்துகளாக விளங்கும் அறக்கட்டளைகள் அனைத்தும் இந்த வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ..ஏ.எஸ். அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டிருக்கிறார். உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் செயலாளராக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்துதல் துறை சிறப்பு டி.ஆர்.ஓ.வான பிருந்தா தேவியும், சிறப்பு பார்வையாளராக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வுபெற்ற பொறியாளரான ஆர்.தியாகராஜனும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி வன்னியர் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.

“2009 லேயே திமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது திமுக கூட்டணியில் பாமக செல்வாக்காக இருந்ததால் இந்த வாரியம் பெரிதாக செயல்படவில்லை.

அதன் பின் பல்வேறு வன்னியர் சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தத் தால் இப்போது தமிழக அரசு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தை சட்டபூர்வமாக அமைத்திருக்கிறது. இதன் தலைவராக சி.என். ராமமூர்த்தியை நியமிப்பதற்குதான முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் அமைச்சர் சி.வி.சண்முகம் தலையிட்டுதான் தலைவராக சந்தானத்தையே நியமிக்க வைத்தார் என்று சொல்கிறார்கள்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019