மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஹாரர் சினிமா பாணியில் கொலை செய்த இயக்குநர்!

ஹாரர் சினிமா பாணியில் கொலை செய்த இயக்குநர்!

சென்னை பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுடையது என்பதும், குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பைக் கிடங்கில் வீசியதும், கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் பள்ளிக்கரணை காவல் நிலைய சரகம், 200 அடி ரேடியல் சாலையிலுள்ள குப்பைக் கிடங்கில், வள்ளுவர் கோட்டத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டன. அந்தக் குப்பையிலிருந்த, பிளாஸ்டிக் பையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை அங்கு வேலை செய்யும் நபர்கள் பார்த்து பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில், பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கை மற்றும் கால்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கரணை கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றிய உடல் உறுப்புகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அந்த உடல் உறுப்புகள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. ராமலிங்கம், நரேந்திரன், எழில்கோதை ஆகிய மூன்று மருத்துவ உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் மரபணு சோதனைக்காக உடல் உறுப்புகளில் இருந்து திசுக்களை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

உடல் உறுப்புகள் எந்த ஆயுதம் பயன்படுத்தி வெட்டி இருப்பார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இயந்திரம் மூலமாகச் செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கிடைத்த தகவல்களை வைத்து குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டறிந்தனர்

இதில், பள்ளிக்கரணை குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுடையது என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டிக் குப்பைத் தொட்டியில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019