மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

புறம்போக்கு நில ஒதுக்கீடு: வழக்கு தள்ளுபடி!

புறம்போக்கு நில ஒதுக்கீடு: வழக்கு தள்ளுபடி!

புறம்போக்கு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ளாமல் தமிழக அரசு நிராகரித்தது தொடர்பாக ஒரு கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், எந்த பாரபட்சமும் இல்லாமல் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கான விதிகளை வகுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது உயர் நீதிமன்றம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 42 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசிடம் விண்ணப்பித்தது வேலூர் விஐடி கல்வி நிறுவன நிர்வாகம். ஆனால், அதேபகுதியில் ஏற்கனவே 98 ஏக்கர் நிலத்தை வழங்கியதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது விஐடி கல்வி நிறுவனம். இந்த வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தை விளையாட்டு மைதானம் அமைக்க மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்தது தமிழக அரசு.

நேற்று (பிப்ரவரி 5) இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனம் தங்களுக்கு ஒதுக்குமாறு விண்ணப்பித்த நிலப்பகுதி பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது என்பதால் அரசு பிறப்பித்த உத்தரவில் விதிமீறல்கள் இல்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு நில ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்து பொதுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019