மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஏப்ரலில் ஹீரோவாகும் யோகி பாபு

ஏப்ரலில் ஹீரோவாகும் யோகி பாபு

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட நகைச்சுவை நடிகர்கள் அதிக படங்களில் வலம் வருவர். அந்தவகையில் இந்தக் காலகட்டத்திற்கான நகைச்சுவை நடிகராக யோகி பாபு உருவெடுத்துள்ளார். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக யோகி பாபுவின் பெயரும் இடம் பெற்றுவிடுகிறது.

யோகி பாபு கூர்கா, தர்மபிரபு என இரு படங்களில் பிரதான கதாபாத்திரங்களிலும் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். தற்போது கூர்கா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

வணிக வளாகம் ஒன்றில் பாதுகாவலராகப் பணியாற்றும் யோகி பாபு கதாபாத்திரம் நெருக்கடியான சூழலில் மக்களை காப்பாற்றும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர் மங்கீஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் ஆர்யன் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ரூபன் பணிபுரிகிறார். தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019