மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

வருவாய்க்காக அரசு டாஸ்மாக்கை நம்ப வேண்டாம்!

வருவாய்க்காக அரசு டாஸ்மாக்கை நம்ப வேண்டாம்!

வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் மாற்று வழிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் இரவு வேளையில் வாகனத்தில் மதுஅருந்தி விட்டுச் செல்வதால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதனால், டாஸ்மாக் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இன்று (பிப்ரவரி 6) இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கும்போது, அதன் நேரத்தை மாற்றியமைப்பதால் என்ன பலன் கிடைக்கும் என கேள்வி எழுப்பியது. வருவாய்க்காக டாஸ்மாக்கை நம்பாமல் மாற்று வழிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மதுவால் ஒரு தலைமுறை அழிந்துவிட்டது, இனி வரும் தலைமுறையாவது காக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதால் பல குற்றங்களைத் தவிர்க்கலாம். அனைத்து ஊர்களிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்ற தீர்மானம் நிறைவேற்றலாமே என்றும் மதுரைக் கிளை கருத்து தெரிவித்தது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றால், டாஸ்மாக் கடைகளில் வாகனம் நிறுத்துமிடம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுப்பியது நீதிமன்றம்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019