மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

கோதண்டராமர் சிலை: எதிர்த்தவர் கைது!

கோதண்டராமர் சிலை: எதிர்த்தவர் கைது!

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடகாவுக்கு கோதண்டராமர் சிலையை கொண்டுபோக விடமாட்டோம் என்று வாட்ஸ் அப்பில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையிலிருந்து கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதிக்கு ஒரே கல்லில் ஆன 370 டன் எடையுள்ள விஸ்வரூப கோதண்டராமர் சிலை கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

கோதண்டராமர் சிலை பிப்ரவரி 2ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தின்னப்பள்ளி என்ற ஊருக்கு அருகில் வந்தது. அங்கிருந்து குருபரப்பள்ளியில் உள்ள மார்கண்டேய நதியைக் கடந்து செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் தாங்காது என்பதால், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மாற்று வழியில் சிலையை கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டனர்.

இதற்காக சிலை கொண்டு செல்லும் குழுவிலுள்ள பொறியாளர்கள் குழுவினர் மார்கண்டேய ஆற்றின் உள்ளே மண்ணைக் கொட்டி தற்காலிக பாலம் ஒன்றை அமைத்தனர். இந்த பாலத்தின் வழியாக சிலையை எடுத்துத் செல்லும் பணியில் இரண்டு நாளாகச் சிலை அமைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மகேஷ்குமார் என்பவர் வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோவில், “காவிரியில் தண்ணீர் விடமறுக்கும் கர்நாடகாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து எதற்காக சிலை செய்து கொண்டுபோக அனுமதிக்கிறீர்கள். சிலை எங்கள் ஊர் வழியாகத்தான் பெங்களூர் போயாக வேண்டும். கிருஷ்ணகிரி வரும்போது நாங்கள் தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்வோம்.” என்று பேசியிருந்தார்.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி போலீசார் நேற்று (பிப்ரவரி 5) இரவு எட்டு மணியளவில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலகுறி, பாரதமாதா கோயில் முன்பாக சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், ரோந்து சென்ற போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், “திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இதற்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவு கேட்டும் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துக்களை வாட்ஸ் அப்பில் பரப்பியதும் தெரியவந்தது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019