மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

டி20: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

டி20: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இரு அணிகளும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை வென்றுள்ள நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியுள்ளது.

வெல்லிங்டனில் இந்த இரு போட்டிகளும் நடைபெறுகிறது. முதலாவதாகப் பெண்கள் அணிக்கான போட்டி நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் சுஸி பேட்ஸ், சோபி டிவைன் ஆகியோர் களமிறங்கினர். சுஸி 7 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும் சோபி நிலைத்து நின்று ரன் வேட்டையில் ஈடுபட்டார். 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். எனவே அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுக்க முடிந்தது.

ஏற்கெனவே ஒரு நாள் தொடரை வென்றிருந்த நிலையில் இந்திய வீராங்கனைகள் டி 20 தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கினர். 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீராங்கனை ப்ரியா புனியா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தாலும் ஸ்மிரிதி மந்தானா அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். அவருக்கு ஜெமினா நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. 34 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 58 ரன்களை எடுத்தார். ஜெமினா 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இருவரது விக்கெட்டுகளும் விழுந்த பின் ஆட்டம் நியூசிலாந்தின் கைக்கு மாறியது. அதன் பின் வந்த எந்த வீராங்கனையும் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.

19.1 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து அதே மைதானத்தில் இந்திய ஆண்கள் அணி நியூசிலாந்து அணியுடன் மோதிவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 3 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய ஆண்கள் அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி20 தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019