மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஆணையத்தில் ஆஜராகாதது ஏன்? பன்னீர் விளக்கம்!

ஆணையத்தில் ஆஜராகாதது ஏன்? பன்னீர் விளக்கம்!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகாதது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு தரப்பிலிருந்து சந்தேகம் எழுப்பப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த விசாரணைக்காக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருப்பதால் வேறு தேதியில் ஆஜராவதாக அவருடைய தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றும் ஆஜராகவில்லை.

இதுகுறித்து பூங்குன்றன் சாட்சியும் ஆணையத்தில் பன்னீர் பதுங்கும் பின்னணியும்! என்ற தலைப்பில் நேற்று நாம் வெளியிட்டிருந்த செய்தியில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆணையத்தில் கொடுத்த சாட்சியில் ஓ.பன்னீர் பற்றி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறாராம். அவை பன்னீருக்கு முழுக்க முழுக்க எதிரானவையாக அமைந்திருக்கின்றன. அதுபற்றியெல்லாம் தன்னிடம் கேள்விகள் கேட்கப்படுமோ என்றுதான் பன்னீர் பயத்தில் இருக்கிறார். இதன் காரணமாகத்தான் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறாராம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019