மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ராமதாஸின் கிண்டல் கூட்டணி!

ராமதாஸின் கிண்டல் கூட்டணி!

வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேசி முடித்தாகிவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பாமகவின் சார்பில் நிழல் நிதிநிலை வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் தமிழகத்திற்கு என்னென்ன நலத்திட்டங்கள் தேவை, அதற்கு எவ்வளவு செலவாகும், திட்டத்தால் எவ்வகையில் மக்கள் பயனடைவார்கள், பிரச்சினைகளுக்கு அதன் தீர்வுகளும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கும். அந்த வகையில் 17 வது வருடமாக பாமகவின் நிழல் நிதி நிலை அறிக்கையில் இன்று (பிப்ரவரி 6) சென்னையில் வெளியிடப்பட்டது.

நிதி நிலை அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமக தொடர்ந்து நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறது. இதிலுள்ள அம்சங்களை தமிழக அரசு பலமுறை தனது பட்ஜெட்டில் பயன்படுத்தியுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் இது முதல்வரின் மேசையில் இருக்கும் வழக்கமாக 10 நாட்களுக்கு முன்னரே நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுவிடுவோம். தற்போதுதான் காலதாமதமாகிவிட்டது” என்று தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019