மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

மீண்டும் தாய்லாந்து செல்லும் சிறுத்தைக் குட்டி!

மீண்டும் தாய்லாந்து செல்லும் சிறுத்தைக் குட்டி!

இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுத்தைக் குட்டி, திரும்பவும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பிப்ரவரி 2ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து சென்னை வந்த தாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் 50 நாளான சிறுத்தைக் குட்டி கடத்திக் கொண்டு வரப்பட்டது. 1.1 கிலோ எடையுடைய சிறுத்தைக் குட்டி தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுத்தை குட்டியை திரும்ப பெற்றுக் கொள்ள தாய்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்.

இதுகுறித்து தெற்குப் பகுதியின் வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் டி.உமா கூறுகையில், தாய்லாந்தில் உள்ள அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கை அமைப்பின் அதிகாரிகள் சிறுத்தை குட்டியைத் திரும்ப பெறுவதற்கு ஒப்புக் கொண்டனர். சிறுத்தையின் தோற்றம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதை தாய்லாந்திற்கு திரும்ப அனுப்பும் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார். விலங்குகள், பறவைகள் எதுவாக இருந்தாலும், அதனுடைய சொந்த இடத்துக்கே திரும்ப அனுப்ப வேண்டியது இந்தியாவின் கடமை என கூறினார்.

புது இடத்திற்கேற்றவாறு சிறுத்தைக் குட்டி கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. குட்டி சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019