மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

‘நிழலை’ வெட்டி வீழ்த்தியவர்!

கிருஷ்ணாபுரம் என்றோர் அழகான கிராமம். சுற்றிலும் மலைப் பகுதிகள். பச்சைப் பசேல் என வயல்வெளிகள். வானுயர்ந்து நிற்கும் தென்னை, பனை மரங்கள். இந்த அழகிய கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து.

அவர் தனது தோட்டத்துக்கு நடுவே கண் குளிரும் வகையில், பல வகையான செடிகள், மரங்கள் சூழ்ந்திருக்க ஓட்டு வீட்டில் வசிக்கிறார். அவரது நிலத்தில் நுணா, பனை, தென்னை, தேக்கு, புளி, முருங்கை, வேம்பு, யூக்லிப்டஸ் எனப் பல வகையான மரங்களும், மலர்களோடு புன்னகைக்கும் பூ செடிகளும் உள்ளன.

பொதுவாக ஓட்டு வீடு என்றால் வெயில் காலத்தில் எவ்வளவு வெப்பமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், மாரிமுத்துவின் ஓட்டு வீட்டில் அந்த நிலை இல்லை. ஏனென்றால் அவரது வீடு மர நிழல்களால் சூழ்ந்திருக்கும். கூரையின் ஓட்டையில் அடிக்கும் ஒளி போல் ஆங்காங்கேதான் சூரிய வெளிச்சம் இருக்கும்.

ஒருநாள் தென்னை மரத்தில் இளநீர் பறித்துக்கொண்டிருக்க, மாரிமுத்துக்குத் தெரிந்த நபர் ஒருவர் வருகிறார். அந்த நபர் அங்கிருந்த நுணா மரத்தைப் பார்த்து, “இதென்னப்பா வீட்டுக்கு பகக்கத்துல நுணா மரம். இது இங்கே இருந்தா வீட்டுக்கு ஆகாதுப்பா” எனப் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார்.

இதைகேட்ட மாரிமுத்து அடுத்த வேலையாக நுணா மரங்களையெல்லாம் வெட்டி விறகுக்கட்டையாகப் பயன்படுத்திவிட்டார். மற்றொரு நாள் நெற்பயிருக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த வேலையில், அவரது நண்பர் ஒருவர் வருகிறார். அவர், நெற்பயிர் நடப்பட்டுள்ள வயலுக்கு நடுவே இருக்கும் தேக்கு மரத்தைப் பார்த்ததும், இந்த மாதிரி வயலுக்கு நடுவே தேக்கு மரமெல்லாம் இருக்கக் கூடாது என்கிறார். உடனே மாரிமுத்து அந்த மரத்தையும் வெட்டி விற்பனை செய்துவிட்டார்.

தூரத்துச் சொந்தமான நல்லம்மாள் பாட்டி மாரிமுத்து வீட்டுக்கு வருகிறார். அப்போது அவரது நிலத்தில் இருந்த யூக்லிப்டஸ் மரத்தைப் பார்த்து இந்த மரமெல்லாம் விவசாய நிலத்தில் இருந்தால் நிலத்தடி நீரெல்லாம் உறிஞ்சிடும்பா என்று அறிவுரை சொல்கிறார். அடுத்தது என்ன, அந்த மரத்தையும் மாரிமுத்து வெட்டிவிடுகிறார்.

இவ்வாறு பலரும் சொன்னதைக் கேட்டு நிலத்தில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்துவிடுகிறார். அவரது நிலத்தில் வெறும் பயிர் வகைகள் மட்டுமே இருந்தன.

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வழக்கம்போல சில்லென்று இல்லை அவரது வீடு. சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆடு மாடுகள் நிழலில் கட்ட இடமில்லை. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக ஓட்டு வீட்டில் அவரால் வசிக்கவும் முடியவில்லை.

முன்னெப்போதும், இதுபோன்று இருந்ததில்லையே என்று யோசிக்கிறார். அப்போதுதான் புரிகிறது மரங்கள் இல்லாததுதான் காரணம் என்று. மரங்கள் இல்லாததன் பயனை உணர்கிறார். தான் வெட்டிய மரங்கள் இருந்த இடங்களில், மீண்டும் பல வகையான மரக்கன்றுகளை வாங்கி வந்து நடுகிறார்.

அந்த மரங்கள் வளர்ந்து குடை போல் நிழல் தருவதற்கு குறைந்தது. 6,7 வருடங்களாவது ஆகும். அவர் வெட்டிய மரங்கள் எல்லாம் அவரது மூதாதையர்கள் வைத்த மரங்கள் சுமார் 40, 50 ஆண்டுகள் பழைமையானவை.

ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ போதும். ஆனால் வளர்ப்பதற்கு?

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019