மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

காங்கிரஸுக்கு இன்னொரு செயல் தலைவர்!

காங்கிரஸுக்கு இன்னொரு செயல் தலைவர்!

பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு கே.எஸ். அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவரோடு நான்கு செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பிப்ரவரி 5 ஆம் தேதி மோகன் குமாரமங்கலம் காங்கிரசின் ஐந்தாவது செயல் தலைவராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டிருக்கிறார். சேலம் தொகுதிக்கு தற்போது குறி வைத்து சேலத்தில் மக்கள் பயணம் நடத்திவரும் மோகன் குமாரமங்கலம் இப்போது தமிழ்நாடு ப்ரஃபஷனல் காங்கிரஸின் தலைவராகவும் இருக்கிறார்.

இந்த செயல் தலைவர் நியமனம் மட்டுமல்லாது கே.எஸ்.அழகிரி தலைமையில் - மாநில தேர்தல் குழு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் - ஒருங்கிணைப்பு குழு, . திருநாவுக்கரசர் தலைமையில் - பிரச்சார குழு , கே.வி. தங்கபாலு தலைமையில் - விளம்பர குழு, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் - ஊடக ஒருங்கிணைப்பு குழு,கே.ஆர். ராமசாமி தலைமையில் தேர்தல் நிர்வாக குழு ஆகிய குழுக்களையும் அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019