மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

சிலை திருட்டு: முன்னாள் அலுவலர் கைது!

சிலை திருட்டு: முன்னாள் அலுவலர் கைது!

திருச்சி திருப்பராய்த்துறை கோயில் சிலை திருட்டு வழக்கில், ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் செயலர் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானது திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோயில். இங்கு செயல் அலுவலராகப் பணியாற்றிய ஆனந்த்குமார், திருமாலைக்கட்டி ராமநாதன், கணக்கர் கண்ணன் ஆகியோர் தொன்மையான அங்காளம்மன் சிலையைத் திருடி விற்றதாகப் புகார் எழுந்தது. அந்தத் தொன்மையான சிலையைப் போன்று புதிய சிலை செய்து கோயிலில் வைத்ததாகவும், அந்தச் சிலை செய்வதற்காகக் கோயிலில் உள்ள தொன்மையான பாத்திரங்களை உருக்கியதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

2017ஆம் ஆண்டு போகசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிலைகள் அக்கோயிலில் இருந்து காணாமல் போனது. இதையடுத்து, ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, திருமாலைக்கட்டி ராமநாதன், கணக்கர் கண்ணன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தகுமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் தலைமறைவானார். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019