மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

வாடகை வீட்டில் வசிப்போரின் வலி: டுலெட்

வாடகை வீட்டில் வசிப்போரின் வலி: டுலெட்

செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள டுலெட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர் திடீரென வீட்டைக் காலி செய்யச் சொல்ல குடும்பத்துடன் வீடு தேடி அலையும் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அதிக கட்டணம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தராமல் மறுப்பது என அன்றாடம் சந்திக்கும் பல சம்பவங்கள் காட்சிகளாக உருவாகியுள்ளன. “டிவி நம்மளோடதா, வண்டி நம்மளோடதா. அப்ப ஏன் இந்த வீடு மட்டும் நம்மளோடது இல்ல?” என்ற சிறுவனின் கேள்வியோடு ட்ரெய்லர் நிறைவடைகிறது.

இந்தப் படத்துக்கு இசையின் தேவை இல்லை எனக் கருதிய இயக்குநர் படத்தில் எங்கும் இசையைச் சேர்க்கவில்லை. ஆனால், ட்ரெய்லருக்காக மட்டும் சிறிய இசைத் துணுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சந்தோஷ் நம்பிராஜன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 34 விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படத்தை பிப்ரவரி 21ஆம் தேதி பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019