மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

கொல்கத்தா காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை: மத்திய அரசு!

கொல்கத்தா காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை: மத்திய அரசு!

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் புதிய பிரச்சினையைச் சந்திக்கவுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் ஒழுக்கமற்ற நடத்தையில் ஈடுபட்டதாகவும், அகில இந்திய பணியாளர்கள் நடத்தை விதிகள் 1968/ஏஐஎஸ் மற்றும் 1969ஐ மீறியதாகவும் கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், விசாரணை நடத்த பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிபிஐ அதிகாரிகள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

சிபிஐ நடவடிக்கைக்கும், மோடி அரசுக்கு எதிராகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அன்று மாலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தப் போராட்டத்தில் ராஜீவ் குமாரும் பங்கேற்றிருந்தார். ஜனநாயகத்தைக் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மாலை மம்தாவுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் நீடித்த தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார் மம்தா.

“உச்ச நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. எனவே, தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன்” என்று அறிவித்தார் மம்தா. இந்த நிலையில், ராஜீவ் குமார் விதிகளை மீறி அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

சிபிஐ முன் ஆஜராகும் கொல்கத்தா காவல் ஆணையர்

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019