மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

கழிவுநீர்த் தொட்டியில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கழிவுநீர்த் தொட்டியில் சிக்கிய இளைஞர் மீட்பு!

சிவகாசி அருகே கழிவுநீர்த் தொட்டியில் சிக்கிய இளைஞர் ஒருவர், கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விளையாட்டரங்கு உள்ளது. நேற்று (பிப்ரவரி 5) இங்குள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் ஸ்ரீபால் என்ற வடமாநில இளைஞர். அப்பணியை மேற்கொண்டபோது, அவர் அத்தொட்டியின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். அவரது சத்தம் கேட்டு வந்த விளையாட்டரங்கப் பணியாளர்கள் இது பற்றி அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் ஸ்ரீபாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஏழு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார். இதையடுத்து, ஸ்ரீபால் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது காலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019