மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

வர்த்தகப் போரால் பயன்பெற்ற இந்தியா!

வர்த்தகப் போரால் பயன்பெற்ற இந்தியா!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவிய வர்த்தகப் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பயனடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையில் நிலவிய சுமுக வர்த்தகம் தடைபட்டது. அமெரிக்காவைப் பழிவாங்க சீனாவும் வரிவிதிப்பில் ஈடுபட்டது. இரு நாடுகளும் மாறி மாறி ஒருவொருக்கொருவர் வரி விதித்து வர்த்தகப் போரை உருவாக்கினர். இதனால் இரு நாடுகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ‘வர்த்தகப் போரால் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கப்பட்டது. அதனால் 6 விழுக்காடு அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே பொருட்களை வாங்கின. அதேபோல 85 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கப்பட்டது. 5 விழுக்காடு சீன நிறுவனங்கள் மட்டுமே பொருட்களை வாங்கின’ என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019