மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

அமித் ஷா ஆபரேஷன் ஆரம்பம்? அதிமுக பிரமுகர் இல்லத்தில் ஐடி ரெய்டு!

அமித் ஷா ஆபரேஷன் ஆரம்பம்? அதிமுக பிரமுகர் இல்லத்தில் ஐடி ரெய்டு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிமுக பிரமுகர் பாஸ்கர் இல்லத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் பாஸ்கர். வந்தவாசி தொகுதி அதிமுக செயலாளராக இருந்துவரும் இவர், அரசின் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களையும் எடுத்துச் செய்துவருகிறார். இவருடைய மனைவி புஷ்பா, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் கெஜலட்சுமி நகரிலுள்ள பாஸ்கர் இல்லத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 4) மாலை 6 மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பூர்ணசந்த் மீனா தலைமையில் திருவண்ணாமலை மற்றும் வேலூரிலிருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். எட்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இச்சோதனை நேற்று முடிவடைந்த நிலையில், இரண்டு பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். வருமானத்தை முறையாகக் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதனால்தான் இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதிமுகவைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான பாஜகவின் ஆரம்ப அஸ்திரம்தான் இந்த ரெய்டு என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக மூத்த தலைவர்கள் பலருக்கு விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதை தம்பிதுரை, பொன்னையன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அதிமுகவை கூட்டணிக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அதிமுக எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் அவர்கள் பெயரில் வாங்கிய சொத்துகளையும் குடும்பத்தினர் மற்றும் பினாமி பெயரில் வாங்கிய சொத்துகளையும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டதன் பேரில் ரகசியமாகக் கணக்கெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும், இந்தச் சொத்து விவரங்கள் மொத்தமும் கைக்கு வந்த பிறகுதான் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும் என்றும் நாம் டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019