மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல்?

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல்?

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் காலமாக இருப்பதால் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. நவம்பர் 28ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையிலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டானது வழக்கமான பட்ஜெட்டாகவே இருக்குமென்று பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எந்த பட்ஜெட்டாக இருந்தாலும் முழுமையான பட்ஜெட்டாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இடைக்கால நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட்டையே தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் நவ் ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

புதன் 30 ஜன 2019