மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

அழகு வாக்குகளைப் பெற்றுத் தராது: பிரியங்கா மீது விமர்சனம்!

அழகு வாக்குகளைப் பெற்றுத் தராது: பிரியங்கா மீது விமர்சனம்!

அழகாக இருந்தால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது என்று பிரியங்கா காந்தியை பாஜக அமைச்சர் ஒருவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரு தினங்களுக்கு முன்பு தனது சகோதரியான பிரியங்கா காந்தியை உபி கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக நியமித்தார். இதையடுத்து அவருக்குப் பாராட்டுகளும், எதிர்ப்பும் ஒரு சேர குவிந்து வருகின்றன. காங்கிரஸார் பிரியங்கா காந்தியை மோடிக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிகார் மாநில, பொதுச் சுகாதார மற்றும் கட்டமைப்புத் துறை அமைச்சர், வினோத் நாராயண் ஜா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரியங்காவின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். ஆனால் அழகான முகத்தை வைத்திருந்தால் மட்டும் தேர்தலில் வாக்குகளை வெல்ல முடியாது. ஊழல் புகார்களில் சிக்கிய ராபர்ட் வதேராவின் மனைவிதான் பிரியங்கா. இன்னமும் ராபர்ட் வதேரா மீது ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரியங்கா காந்தி அழகாக இருந்தாலும், அவர் அரசியல் ரீதியாக எதுவும் சாதிக்கவில்லை” என்று கூறியுள்ளார். வினோத் நாராயண் ஜாவின் கருத்துக்குத் தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரியங்காவை விமர்சித்ததற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பிரபல பால் நிறுவனமான அமுல் பிரியங்கா காந்தியின் அரசியல் நுழைவை கார்ட்டூனாக வரைந்து வெளியிட்டது ட்ரெண்டாகி வருகிறது. அதில் பிரியங்காவும் ராகுல் காந்தியும், சீஸ் துண்டுகளைப் பகிர்ந்து சாப்பிடுவது போல் வரையப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அரசியலை மையப்படுத்தும் நோக்கில் அந்த கார்டூன் படத்தில் ”ஃபாமிலி ஸ்ட்ரீ” என்று எழுதப்பட்டுள்ளது. இதை அமுல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019