மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

சம்பளத்தைக் கூட்ட சூப்பர் ஐடியா: அப்டேட் குமாரு

சம்பளத்தைக் கூட்ட சூப்பர் ஐடியா: அப்டேட் குமாரு

இந்த பத்து வருசம் சேலஞ்ச் முடிஞ்சு இப்போ மெல்ல வேற விளையாட்டுக்கு மாறிட்டாங்க. உங்களைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார், பிரதமர் மோடி என்ன சொல்கிறார்ன்னு அவங்க கையில நம்ம போட்டோவை வச்சுகிட்டு நாலு வார்த்தை நம்மள பத்தி சொல்றாங்க. எனக்கு எடப்பாடி தான் வந்தார். வந்தவரு ‘இவர் தனி கட்சி ஆரம்பிச்சா எங்களோடு தான் முதல் கூட்டணி’ன்னு என்னைய பத்தி சொல்லிருக்காரு. நாலு ட்விட்ட பார்த்து லைக் பண்ணுனோமா, நாலு மீம்ஸ் போட்டோமான்னு நம்ம பிழைப்பு போய்கிட்டு இருக்கு. இவரு என்னடான்னா இந்த குமாரை கட்சி ஆரம்பிக்க வச்சு நடுத் தெருவுக்கு வர வச்சிடுவார் போல. அதுலயும் அவர் கூட கூட்டணி வேற வைக்கனுமாம்.

ஆசிரியர்கள் போராட்டம் நடத்துறதால தற்காலிக ஆசிரியர்களை நியமிக்குறாங்களே அது மாதிரி ஒரு வருசத்துக்கும் மேல காலியா இருக்குற தொகுதிகளுக்கு தற்காலிக எம்.எல்.ஏ.க்களை நியமிக்கலாமேன்னு நம்ம பசங்க ஐடியா கொடுக்குறாங்க. அப்படி நியமிச்சாருன்னா மட்டும் நமக்கு ஒண்ணு கேட்டு வாங்கனும். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்குறாங்களாம். சட்ட மன்றத்துல ஆட்சி கவிழ்ற மாதிரி இருந்தா ஆசிரியர்களும் வந்து ஓட்டு போடலாம்னு இருந்துருந்தா கேட்குற சம்பளத்தை கொடுத்துருப்பாரு.. அப்டேட்டை பாருங்க.

@HAJAMYDEENNKS

குழந்தைகளை சரியான நேரத்துக்கு பள்ளிக்கு அனுப்புறது விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புறது மாதிரி கஷ்டமான டாஸ்க்தான் அம்மாக்களுக்கு !

@Annaiinpillai

தவணை முறையில் உயிரை விலை பேசி கொண்டு இருக்கிறார்கள் இன்சூரன்ஸ் கம்பெனிகள்!

@sultan_Twitz

உ.பி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் கடந்த 16 மாதத்தில் 3,000 என்கவுண்டர்களில் 78 பேர் சுட்டுக்கொலை! - செய்தி #

ஆக்ஸிஜன் கொடுக்காம குழந்தைகள் செத்ததையும் என்கவுண்டர் லிஸ்டுல சேர்க்க மறந்துட்டிங்க..?!

@amuduarattai

கணவர் செலவு செய்யும் போது, மனைவி, "சம்பாதிக்கும் காசையெல்லாம் செலவு செஞ்சுறாதீங்க' என்று சொன்னால், கணவரின் உறவினருக்கு செலவு செய்கிறார் என்றும், "சம்பாதிப்பது செலவு செய்யத்தானே" என்று சொன்னால், மனைவியின் உறவினருக்கு செலவு செய்கிறார் என்றும் அறிக

@sultan_Twitz

தமிழக ஆளுநர் மத்திய அரசின் புரோக்கர்! - வைகோ

தொழில் போட்டி இருக்கலாம் இவ்வளவு பொறாமை இருக்க கூடாது..?

@Annaiinpillai

“உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது” - முதல்வர் பழனிசாமி #

அதுலையும் அந்த வேலை வாய்ப்பு கனவு பிரமாதம் சேகு!

@Kozhiyaar

மருத்துவமனை காத்திருப்பு அறையில் கைப்பேசி பார்ப்பதா வேண்டாமா என்பதை நோயின் வீரியமே முடிவு செய்கிறது!!!

@வெ. பூபதி

'இருக்கும்போதே அனுபவிச்சுடணும்' என பறப்பவர்கள் துன்பத்தையும் சேர்த்தே அனுபவிக்கிறார்கள்!

@Thaadikkaran

நமக்கு தெரிஞ்ச ஹிந்தில ஏக் தோன்னு ஹிந்திகாரங்ககிட்ட கணக்கு சொன்னா, அவன் சிம்பிளா ரெண்டுதானேன்னு பொசுக்குன்னு கேட்டுபுடுறான்..!!

@oorkkavalaan

எவ்வளவு "கொழுப்பு"இருந்தா இங்க வருவ என கேட்க தோணுது ஜிம்முக்கு வருகின்றவர்களை பார்த்து....

@Suyanalavaathi

'வருடாவருடம் 5 நாட்கள் தனியாக நான் காட்டுக்குள் வசிப்பேன்! - பிரதமர் மோடி

அப்பிடியே வருஷம் முழுவதும் காட்டுல இருந்துடீங்கனா , மக்கள் நிம்மதியா நாட்டுல இருப்பாங்க !!

@Annaiinpillai

பஸ்ஸில் கால் வலிக்க நம்ம நிற்கும் பொழுது கண்டக்டர் எழுந்து நின்று மத்தவங்களுக்கு அவருடைய சீட்ட கொடுக்குற நேரம் நம் பொறுமைக்கான எல்லைய நம்மால் உணர முடிவது டிசைன்!

@Fazil_Amf

நிதின் கட்காரியை பிரதமராக நிறுத்தினால்தான் கூட்டணி: சிவசேனை!

இவரு தேர்தல் வாக்குறுதி விளையாட்டுக்கு சொன்னோம் சொன்னவருல.!

@parveenyunus

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மத்திய அரசிடம் இருக்கும் கல்வியை மீண்டும் மாநில அரசிடமே ஒப்படைப்போம் - ராகுல்

'நீட்'டி முழக்காம,சுருக்கமா சொல்லிட்டீங்களே..!

@parveenyunus

நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை- நடிகை கரீனா கபூர்

இவர் வட நாட்டு 'தல' போல..!

@Thaadikkaran

அப்றம் ஏதாவது சொல்றதுக்கு இருக்கான்னு மீட்டிங்ல கேக்கும்போது, பக்கத்துல இருக்குறவங்க மூஞ்சிய பார்த்துட்டு பதில் சொல்லாமல் அமைதியாய் இருப்பது டிசைன்..!!

-லாக் ஆஃப்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019