மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

ஓசூர் தொகுதி காலியாக உள்ளதா? தேர்தல் அதிகாரி!

ஓசூர் தொகுதி காலியாக உள்ளதா? தேர்தல் அதிகாரி!

ஓசூர் தொகுதி காலியானது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளரிடமிருந்து தனக்கு எவ்வித தகவல் வரவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிறை தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் இதுவரை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படவில்லை.

“பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரை சட்டப்பேரவை இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவரின் தகுதி நீக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அறிவித்து தமிழக சட்டப்பேரவையில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 21 ஆக மாற்றி அமைக்க வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 25) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

“ஓசூர் தொகுதி காலியாக இருப்பது குறித்து சட்டப்பேரவை செயலாளரிடமிருந்து எங்களுக்கு முறைப்படி தகவல் வரவேண்டும். இதுவரை அப்படி எந்த தகவலும் வரவில்லை. வரும்பட்சத்தில் அதனை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம்” என்று பதிலளித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019