மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

10% இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

10% இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னேறிய சாதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்று (ஜனவரி 25) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவில், “இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக பதிலளிப்பதற்கு மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது எனவும், சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டத்திருத்தம், பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாகவும், 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு உச்சவரம்பை மீறுவதாகவும் உள்ளதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. அதில் பகுஜன் சமாஜ், இடதுசாரிகளும் அடக்கம்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019