மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

சேவையைத் தொடங்கும் ‘ட்ரெயின் 18’!

சேவையைத் தொடங்கும் ‘ட்ரெயின் 18’!

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயிலான ‘ட்ரெயின் 18’ இந்த வாரத்தில் தனது சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சகத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ஜனவரி 24ஆம் தேதி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ட்ரெயின் 18’ ரயில் தனது சேவையைத் தொடங்குவதற்குத் தயாராகிவிட்டது. மூன்று நாட்கள் ஆய்வுக்குப் பிறகு இந்திய மின்சார ஆய்வாளர் (இஐஜி) ரயிலை இயக்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். எனவே இந்த வாரத்தில் இந்த ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலின் சோதனை ஓட்டங்கள் முடிந்து ஒரு மாதங்களுக்கு மேலாகிறது. ரயிலுக்கான தரநிலை சார்ந்த அனுமதியும் ரயில்வே பாதுகாப்பு தலைமை அதிகாரியால் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. தற்போதைய மின்சார ஆய்வு அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு முறைப்படி அனுப்பப்பட்டு, அதற்குப் பிறகு ரயில் சேவை தொடக்கம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019