மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சயன், மனோஜ் முறையீடு!

உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சயன், மனோஜ் முறையீடு!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உதகை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சயன், மனோஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் உள்ள மனோஜ், சயன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதாகவும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சயன், மனோஜ் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்து வரும் இத்தகைய தகவல்களால் இவ்வழக்கில் தொடர்புடைய பிற சாட்சிகள் கலைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (ஜனவரி 24) உதகை நீதிமன்ற நீதிபதி வடமலை, முன் விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கில் சயன், மனோஜ் இருவர் சார்பில் அரசு மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி ஜனவரி 29ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சயன், மனோஜ் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜனவரி 25) முறையீடு செய்யப்பட்டது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019