மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

பாஜகவை விமர்சிப்பது தனிப்பட்ட கருத்து: தம்பிதுரை

பாஜகவை விமர்சிப்பது தனிப்பட்ட கருத்து: தம்பிதுரை

பாஜக குறித்து பேசுவது தன்னுடைய தனிப்பட்ட கருத்துதான் என்று தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவைத் துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை , பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி குறித்து மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்பட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தம்பிதுரை கூறிவருகிறார். இதற்கு பாஜக தலைவர்களும் பதிலடி கொடுத்துவருகின்றனர். இதுதொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரையின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் நேற்று (ஜனவரி 24) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மேகதாட்டு அணை கட்டக் கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. இதுதொடர்பாக தொடர்ந்து போராடியதால்தான் அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேகதாட்டு அணை வந்தால் தமிழகம் பாலைவனமாகிவிடும். இந்த விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் தந்துகொண்டிருக்கிறோம். ஜெயலலிதா உண்ணாவிரதம் கூட இருந்தார். அணை கட்டக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பாஜக குறித்தான உங்களின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “மேகதாட்டு அணை கட்டுவதற்காக மத்திய பாஜக அரசு அனுமதி தந்திருக்கிறது. அதனை வேண்டாம் என்று சொல்கிறேன், இது என்னுடைய கருத்து” என்று பதிலளித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுடன் இணைந்து நீங்கள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, “நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப பாஜகவுடன் கூட்டணியா என்று கேட்கிறீர்கள். பாஜகவுடன் கூட்டணி என்று உங்களிடம் யாராவது கூறியிருக்கிறார்களா? கடந்த காலங்களில் ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்டுள்ளோம். அந்த நிலையில்தான் தற்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறோம். தேவைப்பட்டால் கூட்டணி அமைப்போம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இந்த கேள்வி எழுவது அவசியமல்ல” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019