மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

குறைந்த புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள்: இஸ்ரோ சாதனை!

குறைந்த புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள்: இஸ்ரோ சாதனை!

நேற்றிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி – சி44 விண்கலம் மூலமாக, குறைந்த தூர புவிவட்டப் பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி44 விண்கலம் நேற்று (ஜனவரி 24) இரவு 11.37 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ இதுவரை பிஎஸ்எல்வி விண்கலங்கள் மூலமாக, 53 இந்திய செயற்கைக்கோள்களையும், 269 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியுள்ளது. அந்த வகையில் பிஎஸ்எல்வி – சி44 விண்கலம் 46வது விண்கலம் ஆகும். அது மட்டுமல்லாமல், 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

பிஎஸ்எல்வி – சி44 விண்கலம் ஏவப்பட்டதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வழக்கமாக, விண்கலத்தின் 4வது நிலையில் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டதில்லை. ஆனால், முதல் முறையாக பிஎஸ்எல்வி -சி44 விண்கலத்தின் 4வது நிலையில், மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கைக்கோள் பொருத்தப்பட்டது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் ஆகியோர் இணைந்து, ஹாம் ரேடியோ சேவைக்காக இதனைத் தயாரித்திருந்தனர். இது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. வழக்கமாக, விண்கலத்தின் 4வது நிலையானது தனியாகப் பிரிந்து விண்ணில் 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சுற்றிவரும். இந்த காலகட்டத்தில் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் முயற்சியில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலமாக, புதிய வரலாறைப் படைத்துள்ளது இஸ்ரோ.

அதேபோல, பூமியில் இருந்து 274.12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. புவி அமைப்பு, ராணுவ எல்லைகளைக் கண்காணிப்பதற்காக, இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பூமியை மிகத் துல்லியமாகப் படமெடுக்க முடியும். இது இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு உதவும்.

வழக்கமாக, ஒரு விண்கலத்தின் உந்து சக்திக்காக ஆறு பூஸ்டர்கள்வரை பொருத்தப்படுவது வழக்கம். நேற்றைய பிஎஸ்எல்வி – சி44 ஏவப்பட்டபோது, 2 பூஸ்டர்களே பொருத்தப்பட்டன.

இது பற்றிக் குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், இதன் மூலமாகச் செலவுகள் குறையும் என்று தெரிவித்தார். “உலகிலேயே மிகவும் இலகுரக செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பாராட்டுகள். இதுபோன்ற முயற்சிகளை எதிர்காலத்தில் அதிகளவில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் என்ற எஸ்எஸ்எல்வி விண்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் இவை விண்ணில் செலுத்தப்படும். சந்திராயன் 2 விண்கலம் வரும் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும்” என்று சிவன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 25 ஜன 2019