மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

கரூர்: திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி

கரூர்: திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. ஜெ மறைவையடுத்து சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்தார், அவர் சிறைக்குச் சென்ற நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, டிசம்பர் 14ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கரூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஸ்டாலின், “உழையுங்கள். உரிய நேரத்தில் உங்களுக்கு உரிய பலன் கிடைக்கும். நான் உழைப்பு என்று சொல்வது தேர்தல் வேலைகளைத்தான்” என்று செந்தில் பாலாஜிக்கு திமுகவில் பதவி கொடுப்பது தொடர்பாகக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நன்னியூர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வெள்ளி 25 ஜன 2019