மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

நம்பிக்கையினால் பெருகும் ஆற்றல்!

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என்று வாழ்வில் ஒரு முறையேனும் வருத்தப்படாதவர்களே கிடையாது. அடுத்தடுத்துத் துன்பங்கள் வந்தாலே, உடனே அயர்வுற்றுக் கதறுபவர்களும் இந்த உலகில் உண்டு. துன்பங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும்போதே, அவநம்பிக்கையின் முனைகளுக்குச் செல்கிறோம். தவறான முடிவுகளை மேற்கொண்டு, வாழ்வைத் தவற விடுகிறோம். அந்தக் கணத்தைத் தாண்டியவர்களுக்கு, முள் படுக்கையும் பஞ்சு மெத்தைதான். அவர்களது மனத்திடம் கெட்டியான இரும்பையும் உருக்கக்கூடியது.

பைபிளில் கொரிந்தியர் 10:13இல் குறிப்பிட்டிருக்கிற வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறு உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மை உள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்தையும் கடந்து வா என்றே எல்லா மார்க்கங்களும் கூறுகின்றன என்பதில் ஆச்சரியம் இல்லை. ஒருமுறை இரண்டு நண்பர்கள் இடையே விவாதம் எழுந்தது. ஒருவர் பக்திமான். இன்னொருவர் அதற்கு எதிரான கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர். ‘சாமி கும்பிடுறதால உன்னோட துன்பம் குறைஞ்சிடுச்சா’ என்று ஒருநாள் அவர் தனது நண்பரிடம் கேட்டார். நண்பனின் வாழ்வில் அப்படி எதுவும் நிகழவில்லை என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

முதலாமவர் அதற்கு மிக எளிமையாகப் பதிலளித்தார். “கடவுளை நம்புறதால, கஷ்டத்தைச் சந்திக்கிற பக்குவம் வந்திருக்கிறதா நம்புறேன். எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கப் பழகிட்டேன்” என்றார். எந்த மதமானாலும் அதில் பின்பற்றப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் அத்தகைய ஆற்றலைத் தொடர்ச்சியாக மனிதர்களுக்கு அளிப்பதாகக் கூறினார். இரண்டாமவர் அதை ஒப்புக்கொண்டார். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல இங்கு கேள்வி.

நம்மைச் சுற்றியுள்ள எளிமையான மனிதர்களை உற்றுப் பார்த்தால் தெரியும். அவர்களை இயக்குவது உடலில் இருக்கும் உயிர் அல்ல; அதனுள் இருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு என்ன பெயர் வைத்தால் என்ன?

- உதய்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019