மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை!

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை!

தினப் பெட்டகம் - 10 (3.12.2018)

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் (World day of handicapped)

1. உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 15% மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

2. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1941-1971 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு எடுக்கப்படவே இல்லை. மூன்று வகையான பாதிப்புகளை - முழுதாகக் கண் தெரியாத, உடல் பாகங்களில் குறைபாடுள்ள, முழுதாக காது கேட்காத - நபர்களின் எண்ணிக்கை கொண்ட தரவுகள் முதன்முதலில் 1981ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

3. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, எட்டு வகையான குறைபாட்டுடன் கூடிய மக்களின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2.68 கோடி.

4. உலக வங்கியின் தரவுகள்படி, தற்போது இந்தியாவில் ஏறத்தாழ 8 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

5. இந்தியாவின் மாற்றுத் திறனாளிகளில் ஏறத்தாழ 70% கிராமங்களில் வசிக்கின்றனர்.

6. 10-19 வயதுடையவர்களில்தான் அதிகமான மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

7. மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, பள்ளிப் படிப்பை நிறுத்துவதற்கான சாத்தியம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது.

8. உலகிலேயே அதிகமான பார்வையற்றோர் இந்தியாவிலேயே உள்ளனர்.

9. இந்தியாவில், ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

10. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், 2016 சட்டத்தின்படி, அனைத்து மக்களும் செல்வதற்கு ஏற்ற வகையிலான கட்டடமாக ஒன்று இல்லாதபட்சத்தில், அதை இடித்து மீண்டும் கட்டலாம்.

- ஆஸிஃபா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018