மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பாடலையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!

பாடலையும் விட்டுவைக்காத  தமிழ் ராக்கர்ஸ்!

திரைப்படம் வெளியாகும் அன்றோ அதற்கு முன்பாகவோ படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அச்சுறுத்திவரும் தமிழ் ராக்கர்ஸ் பேட்ட படத்தின் பாடலை படக்குழு வெளியிடுவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

2.o படம் வசூல் சாதணை படைத்துள்ளதாக படக்குழுவே அதிகாரபூர்வமாக ஒரு பக்கம் அறிவித்துள்ளது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த படம் குறித்த செய்திகளும் விளம்பரங்களும் அதிகளவில் வந்துகொண்டிருக்கும் போதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பேட்ட படத்தின் விளம்பரப்பணிகளும் வேகமெடுத்துள்ளன. படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்நிலையில் மரண மாஸ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு இணையதளங்களிலும் மாலை 5.30 மணிக்கு சன் நெக்ஸ்ட் தளத்திலும் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே பாடல் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்ராக்கர்ஸின் தொடர் தாக்குதலால் தமிழ்த் திரையுலகம் என்ன மாதிரியான விளைவுகளை இனி வரும்காலங்களில் சந்திக்கும் இதற்கு தீர்வு என்ன என ஒரு பக்கம் விவாதம் கிளம்பினாலும் பாடல் எப்படி உருவாகியுள்ளது, காலா, கபாலியில் அமையாத எஸ்.பி.பி ரஜினி கூட்டணி இந்த படத்தில் அமைந்துள்ளது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என பேசப்பட்டுவருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முதன்முறையாக அனிருத் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுகிறார். பாடலுக்கான முன்னோட்டம் காலையில் வெளியான போதே பாடலின் இசை உருவாக்க காட்சிகள் கவனம் பெற்றன.

‘பார்க்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை’ என ரஜினியின் குரலில் பாடல் தொடங்குகிறது.

“தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க

உள்ளார வந்தானா பொல்லாத வேங்கை

திமிராமா வாங்க பல்ப் ஆயிடுவீங்க

முறைப்போடு நிப்பான்னா முட்டாம போங்க” அனிருத் அவருக்கான ஓப்பனிங் வரிகளைப் பாடுகிறார்.

“எவன் டா கீழ எவன் டா மேல

எல்லா உயிரையும் ஒண்ணாவே பாரு” என எஸ்.பி.பி குரலில் வரும் வரிகள் ரஜினிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் இருவரும் இணைந்திருப்பதால் உருவாகிய எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018