மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ஜெ திட்டம்: பழனிசாமி அலட்சியம் - தினகரன்

ஜெ திட்டம்: பழனிசாமி அலட்சியம் - தினகரன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலட்சியப்படுத்துகிறார் என்று தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த இலவச சைக்கிள் திட்டம் ஆண்டுதோறும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்வாண்டு 59,000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்க திட்டமிடப்பட்டு, கடந்த சில தினங்களாக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. அந்தச் சைக்கிள் கூடையில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. அந்த சைக்கிள்கள், கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுத் தரமற்றவையாகக் கருதி அம்மாநில அரசால் நிராகரிக்கப்பட்டவை என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கமளித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், “சைக்கிள்களுக்கான பாகங்கள் தனித்தனியாகப் பெறப்பட்டு, அவற்றை இணைத்து சைக்கிளை பூட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு திண்டிவனம் பகுதியில் வழங்கிய சைக்கிளில், முன்கூடை உதிரிப் பாகம் மட்டும், குறிப்பிட்ட அந்தத் தனியார் நிறுவனத்தால் கர்நாடகத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாக, தவறுதலாகத் தமிழகத்துக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. உடனே பரிசோதனை செய்யப்பட்டு சைக்கிளின் தரமும் உறுதி செய்யப்பட்டன” என்று விளக்கமளித்தார்.

இதற்கு அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து நேற்று (டிசம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் கர்நாடக அரசின் சார்பில் அப்படி வழங்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் அவற்றை அம்மாநில அரசு நிராகரித்தது.

நிராகரிக்கப்பட்ட அந்தச் சைக்கிள்களை விழுப்புரத்தில் உள்ள ஒன்பது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கியதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளிவந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஜெயலலிதா மாணவர்களின் நலனுக்காக முன்னெடுத்த உன்னத திட்டத்தை, பழனிசாமி அரசு மிகவும் அலட்சியத்தோடு நடைமுறைப்படுத்தும் முறையால், பயன்பெறும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018