மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

சிறு நிறுவனங்களை வஞ்சிக்கும் வங்கிகள்!

சிறு நிறுவனங்களை வஞ்சிக்கும் வங்கிகள்!

கடந்த மூன்று ஆண்டுகளாகவே சிறு, குறு நிறுவனங்களுக்கான கடனுதவியை வங்கிகள் குறைவாகவே வழங்கி வருவது தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு மற்றும் 2017ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது சிறு, குறு நிறுவனங்கள்தான். அப்பாதிப்பிலிருந்து சிறு, குறு நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும் அவற்றின் தொழில் நடவடிக்கைகளுக்குப் போதுமான நிதியுதவிகள் சரியாகக் கிடைப்பதில்லை. வங்கிகளின் மொத்தக் கடன்களில் சிறு, குறு நிறுவனங்கள் துறைக்கான கடன் பங்கு 2015ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 5.9 சதவிகிதத்திலிருந்து 2018 அக்டோபர் மாதத்தில் 4.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் சிறு, குறு நிறுவனங்கள் துறைக்கான வங்கிக் கடன் அளவு ரூ.3.64 லட்சம் கோடியாகும். இது சென்ற ஆண்டை விட ரூ.8,800 கோடி குறைவாகும். பெரு நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள் அதிகக் கடன் வழங்குவதாலேயே சிறு நிறுவனங்களுக்கான கடனுதவிகள் குறைந்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் துறைக்கு மேற்கூறிய காலகட்டத்தில் ரூ.5,100 கோடி கூடுதலாக மொத்தம் ரூ.26.96 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பத்திரங்கள் மற்றும் வர்த்தகக் காகிதங்கள் வாயிலாக இந்நிறுவனங்கள் ரூ.59,000 கோடி கடன் பெற்றுள்ளன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018