மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பேட்ட பராக், பேட்டி எப்ப பராக்: அப்டேட் குமாரு

பேட்ட பராக், பேட்டி எப்ப பராக்: அப்டேட் குமாரு

ரஜினி படத்துல எத்தனை வேடம் போட்டு நடிக்கிறாரோ தெரியல. ஆனா இன்னைக்கு ட்விட்டர் பேஸ்புக் பக்கம் டபுள் ஆக்டிங்ல கலக்குறாரு. ஒரு பக்கம் 2.o, பேட்ட பாட்டு பத்தி தலைவன் டா கெத்து டாங்குற ரேஞ்சுல கொண்டாடிகிட்டு இருக்காங்க. அப்படியே இன்னொரு பக்கம் வந்தா அவர் கொடுத்த பேட்டிக்கு வச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க. வழக்கம் போல அவருக்கு பாட்டு ஹிட் ஆகிடுது பேட்டி மட்டும் ஏழாம் பொருத்தமா ஆகிடுது. இதையெல்லாம் பார்த்துட்டு இனி அவர் புக் ஆகுற படத்தோட புரொடியூசர் படத்துல நடிக்குறதுக்கு இவ்வளவு சம்பளம், பேட்டி கொடுக்காம இருக்குறதுக்கு இவ்வளவு சம்பளம்னு ஒதுக்கிருவாங்கன்னு தம்பி ஒருத்தர் தொலைநோக்கு பார்வையில யோசிச்சு சொல்லிட்டு போறார். அப்டேட்டை பாருங்க. அடுத்த பேட்டி எப்பன்னு விசாரிச்சுட்டு வாரேன்.

@itzkarthik_v

‘நாட்டுக்கு நல்லது செய்யவே மோடி கடினமாக உழைக்கிறார்' - ரஜினி ஓபன் டாக்!

அப்டியே எந்த நாட்டுக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க பாஸ்.....

@mohanramko

மால்ல சினிமா பார்க்க போன எனக்கு 150 ரூபாய் டிக்கெட், சினிமாவே பார்க்காம பார்க்கிங்ல இருக்கற வண்டிக்கு 270 ரூபாய்...

நல்லா இருக்கு உங்க நியாயம்

@uvarajav

ஹைவேஸ்ல ஞாயித்து கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு திறந்திருக்கும் ஒரு பஞ்சர் கடை ஏழு கோயிலுக்கு சமம் ...

@Annaiinpillai

அரசியலில் நுழைந்தால் தான் நான் , நானாக இருப்பேன் -ரஜினிகாந்த்

நீங்க நீங்களாவே இருக்குறதுக்கு உங்க வீட்லையே இருக்கலாமே பாஸ்!

@Thaadikkaran

வடை சுடுவதற்கு பேக்கரியில் மாஸ்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை அரசியல்வாதியாகவும் இருக்கலாம்..!

@rahimgazali

பெரியார் சிலைக்கு உயிர் உள்ளதா?- எச்.ராஜா

பட்டேல் சிலை மட்டும் பேசும்போல...

@Satya_Twtz

அதிகமா மொபைல் யூஸ் பண்ணாதீங்க சொல்லி சங்கர் 600 போட்டு படம் எடுத்தால்..

கடைசியில் அந்த படத்தையும் மொபைல டவுன்லோட் பண்ணி பாத்துட்டாங்க படுபாவி பசங்க...

@Vicky_stirring

விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் ஏலம்#

மல்லையாமைண்ட் வாய்ஸ்\\

ஐபிஎல் ல நாம ஏலம் எடுத்தது போயி நம்மளயே ஏலத்துல எடுத்துருவாங்க போல...!!

@Thaadikkaran

தேர்தலுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல தமாகா-ஜிகே.வாசன்

பின்னே, கூட்டணிக்காகவா சார்..!

@Annaiinpillai

நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா #

ஆமா குறை சொல்லனும்னா டீ கடை நடத்திருக்கனும்!

@madurai_jinna

நான் சைவ உணவு உண்பதால், ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன்

- ஆளுநர் பன்வாரிலால்

தட் "நா குடிக்கலைனா எவனும் குடிக்கக் கூடாது" மொமெண்ட்...

@Thaadikkaran

மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்டு போராடுவோம்-தங்கமணி

அப்போ நீங்களும் சமூக விரோதின்னு சொல்லுங்க..!

@madurai_jinna

உ.பியில் 3 மாதங்கள் திருமணம் நடத்த அரசு தடை - செய்தி #

இது மாடுகளுக்கும் பொருந்துமா யோகி சார்.?

@HAJAMYDEENNKS

எல்லாரும் ஒரு படத்தை பாராட்டினால் நாமும் பாராட்டணும் என்ற குறுகிய மனப்பான்மையை வளர்த்து விட்டிருக்கிறது சமூக வலைத்தளங்கள் !

@rahimgazali

புயல் பாதித்து 6 மணி நேரத்தில் நாங்கள் ஓடினோம்.. ஆனால் கமல் 17-வது நாளில் பார்வையிட போயிருக்கிறார்- எச். ராஜா

மோடி இன்னும் வரலியே... அதுக்கு என்ன சொல்லப்போறீங்க?!

@HAJAMYDEENNKS

ஒரு தொழிலில் இவ்வளவு லாபம் என யாரும் வெளிப்படையாக கூறியதில்லை..மாறாக சினிமாவில் மட்டுமே வசூல் கணக்கு பெருமையாக சொல்லப்படுகிறது..அதை ஏன் வெளியே சொல்லணும் அதனால் மற்றவர்களுக்கு என்ன பயன் ?அந்த நடிகரை தவிர !

@drkvm

ரஜினிகாந்த் ஒரு ஆளுமை மிக்க தலைவர்...

யாரு சொன்னா...?

வேற யாரு...அவரேதான்....!!!

@yugarajesh2

புயல் பாதிப்பால் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெறுவது சந்தேகமே- தமிழிசை

பெரியவா சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி-மொமண்ட்..!!

@amuduarattai

உலகத்திற்கு இந்தியா அளித்த பரிசு யோகா. -மோடி.

இந்திய மக்களுக்கு, நீங்கள் அளித்த பரிசு, பண மதிப்பு நீக்க நடவடிக்கையா .!?

@yugarajesh2

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாது-கடம்பூர் ராஜு

ஏன்? சாவியை யாருக்கும் தெரியாமல் ஒளிச்சு வச்சுட்டீங்களா..?

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018