மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ராஜபக்‌ஷே பிரதமராக செயல்பட இடைக்காலத் தடை!

ராஜபக்‌ஷே பிரதமராக செயல்பட  இடைக்காலத்  தடை!

“நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத நிலையில், இலங்கை பிரதமராக எந்த அடிப்படையில் பதவி வகிக்கிறீர்கள்?” என்று ராஜபக்‌ஷேவை கேள்வி கேட்டிருக்கும் இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம், அவரது அமைச்சரவை செயல்படுவதற்கு இன்று (டிசம்பர் 3) இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி இரவு திடீரென இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை அப்பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, உடனடியாக ராஜபக்‌ஷேவை புதிய பிரதமராக நியமித்தார். மேலும் இலங்கை நாடாளுமன்றத்தையும் நவம்பர் 9 ஆம்தேதி முடக்கினார் அதிபர்.

நாடாளுமன்றத்தில் ரனிலுக்கு பெரும்பான்மை இருப்பதால், நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

அதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் நவம்பர் 14, 16 ஆகிய இரு தேதிகளிலும் தனது பெரும்பான்மையை ரனில் விக்கிரமசிங்கே நிரூபித்தார். பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்‌ஷேவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது இரு முறை உறுதியானது.

இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக வாக்களித்த 122 எம்.பி.க்களும் இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நவம்பர் 23 ஆம் தேதி ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

“நவம்பர் 14,. 16 ஆகிய இரு தேதிகளில் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராஜபக்‌ஷேவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் பிரதமராக தொடர்வது சட்ட விரோதமானது. அவரது நியமனத்தை நீக்க வேண்டும்” என்று அம்மனுக்களில் கோரியிருந்தனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018