மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பீமா கோரேகான்: குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்திரவு!

பீமா கோரேகான்: குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்திரவு!

பீமா கோரேகான் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 5 மனித உரிமைப்போராளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை வரும் 8 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று பீமாகோரேகான் வெடிகுண்டு சம்பவத்திலும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடனும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ், அருண் பெராரியா, கௌதம் நவ்லகா மற்றும் வெர்னான் கன்சால்வ்ஸ் ஆகிய மனித உரிமைப்போராளிகள் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வீட்டுக்காவலிலும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலிலும் வைக்கப்பட்டனர்.

இவர்களின் மீது இன்னும் புனே போலீசார் குற்றப்பத்திரிகை பதிவு செய்யவில்லை. சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க புனே போலீசார் கால அவகாசம் கேட்டிருந்தனர். போலீசாரின் கால அவகாசக் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018