மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பாஜகவும், காங்கிரஸும் மாநிலக் கட்சிகளாகிவிடும்!

பாஜகவும், காங்கிரஸும் மாநிலக் கட்சிகளாகிவிடும்!

பாஜகவும், காங்கிரஸும் மாநிலக் கட்சிகளாக மாறிவிடும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால நிவாரணமாக 1500 கோடியும், மறுசீரமைப்புக்கு 15 ஆயிரம் கோடியும் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இடைக்கால நிவாரணமாக 354 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே மேகதாட்டு அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் செம்பியநத்தம் பகுதியில், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று (டிசம்பர் 3) மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது மேகதாட்டு, கஜா பிரச்சினைகள் குறித்து பேசிய தம்பிதுரை, “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கர்நாடகாவில் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாகவே மேகதாட்டு அணை ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு கர்நாடக மாநிலத்தைக் கவனிக்கிறார்கள். தமிழகத்துக்கு கஜா புயலுக்குத் தர வேண்டிய நிதியை கொடுப்பதற்கு தாமதப்படுத்துகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018