மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

கெட் அவுட், கெட் அவுட்: ஆர்ப்பாட்டம்!

கெட் அவுட், கெட் அவுட்: ஆர்ப்பாட்டம்!

எழுவர் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில், ஆளுநர் தமிழகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி டிசம்பர் 3 ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக மற்றும் திக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வைகோ தலைமையில் இன்று சின்னமலை அருகே ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, தவாக உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன. கி.வீரமணி, முத்தரசன், திருமாவளவன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் “கெட் அவுட், கெட் அவுட், புரோகித் கெட் அவுட், கெட் அவுட் ஆப் ராஜ்பவன் என்றும், கெட் அவுட் ஆப் தமிழ்நாடு" என்றும் ஆளுநர் தமிழகத்திலிருந்து வெளியேறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் எழுவர் விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 3 டிச 2018