மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

காஷ்மீரில் குடியிருப்பவர் தகுதி மாற்றம்?

காஷ்மீரில் குடியிருப்பவர் தகுதி மாற்றம்?

ஜம்மு காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியிருப்பவர்களுக்கான தகுதிகளை ஆளுநர் மாற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

அரசியல் சாசனத்தின் பிரிவு 35ஏ அந்த மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது. அந்தப் பிரிவு காஷ்மீர் மாநில மக்களுக்கு நிரந்தர குடிமக்கள் தகுதி வழங்கி அவர்களுக்குச் சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ளது. பிரிவு 35ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் நிரந்தர குடிமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அளிக்கப்படும் முறைகளை எளிமையாக்க முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக அரசின் நிர்வாகத் துறைகளின் ஆலோசனைகளைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதி்ர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பியுள்ளன. நிரந்தர குடிமக்களுக்கான சான்றிதழ் பெறும் விதிமுறைகளை எளிமையாக்குவதன்மூலம் வெளி மாநிலத்தவர்களை காஷ்மீருக்குள் கொண்டுவந்து மாநிலத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில்தான் ஆளுநர் சட்டப்பேரவையைக் கலைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக ஆட்சி இல்லாத நேரத்தில் ஆளுநர் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆபத்தானது என்று அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 3 டிச 2018