மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

அரசு ஊழியர் போராட்டத்திற்கு தடை? கோர்ட்டில் விசாரணை!

அரசு ஊழியர் போராட்டத்திற்கு தடை? கோர்ட்டில் விசாரணை!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை முதல் நடத்த உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆனால் அதே போன்று போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது அவசர வழக்காக இன்று பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கப் படாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

முன்னதாக, ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை.. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது.

கஜா புயல் நிவாரணப் பணிகள் நடந்து வரும் நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை.விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது அரசுக்கு தெரியும் எனக் கூறிய நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டனர். இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.பின்னர், தலைமை நீதிபதி தஹில்ரமானி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வும் மறுத்து விட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக அவசர வழக்காக இன்று பிற்பகல் 1 மணிக்கு விசாரிக்கப்படுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018