மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

சுவிஸ் பணம்: சிக்கும் இந்தியர்கள்!

சுவிஸ் பணம்: சிக்கும் இந்தியர்கள்!

சுவிஸ் வங்கிகளில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் மூன்று நபர்கள் குறித்த விவரங்களை இந்தியாவுக்கு வழங்க அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

கணக்கில்லாத கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் அவற்றை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைப்பது வாடிக்கையாகிவிட்டது. அவற்றைக் கண்டறிந்து இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டாலும், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தின் அளவு தொடர்ந்து உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அங்கு டெபாசிட் செய்யப்படும் தொகை மற்றும் நபர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுவதில்லை என்பதால் அவ்வங்கிகளை நாடும் இந்தியர்களின் எண்ணிக்கையும், நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள இரண்டு நிறுவனங்கள் மற்றும் 3 தனிநபர்கள் குறித்த விவரங்களை இந்திய அரசிடம் வழங்க அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018