மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

சட்டப் பேரவை: சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு!

சட்டப் பேரவை: சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு!

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, உடனே சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளனர்.

கஜா புயலால் தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இதுவரை காணாத சேதத்தினை சந்தித்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்துவந்தாலும், இரண்டு வாரமாகியும் பல இடங்களில் இதுவரை மின்சாரம் வரவில்லை, குடீநீர் தட்டுப்பாடும் நிலவிவருகிறது. இதற்கிடையே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு கர்நாடகத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுத் தலைவர் தருண் அகர்வால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 3) சபாநாயகர் தனபாலை சந்தித்த கே.ஆர்.ராமசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை விரைந்து கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேகதாட்டு அணை விவகாரம் குறித்தும், கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி போதாது என்பதால் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018