மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ஆஸி மண்ணில் இந்தியாவுக்குப் பொன்னான வாய்ப்பு!

ஆஸி மண்ணில் இந்தியாவுக்குப் பொன்னான வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடிவருகிறது. அண்மையில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணில் வீழ்த்துவது எதிர் அணியினருக்கு சவாலானதாகக் கருதப்பட்ட சூழல் முன்னர் நிலவியது. ஆனால் தற்போது அந்த அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘இந்து’ஆங்கில இதழுக்கு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில் டெஸ்ட் தொடர் பற்றிக் கூறியுள்ளார்.

“ஆஸ்திரேலிய அணியின் மட்டை வரிசை தற்போது வலுவாக இல்லை. இதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவாக இருக்கும். பந்துவீச்சைப் பொறுத்தவரை சிறப்பாக உள்ளனர். ஆனால் வலுவான இந்திய பேட்ஸ்மேன்களை எப்படி சமாளிப்பார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும்”என்று கூறியுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018