மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

அமெரிக்க வாழ் இந்தியர்களின் எதிர்பார்ப்பு!

அமெரிக்க வாழ் இந்தியர்களின் எதிர்பார்ப்பு!

அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை அளிக்க ஏர் இந்தியா முன்வர வேண்டுமென அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியப் பொதுத் துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தற்போது அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளிலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை அளித்து வருகிறது. ஆனால், தென்கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அட்லாண்டாவிலிருந்து நேரடியாக விமானங்களை இயக்குவதே வசதியாக இருக்குமென்று ஜார்ஜியா இந்திய-அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ ஜார்ஜியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னாள் இந்திய வெளிவிவகாரத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அண்மையில் அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது இந்தக் கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வி.கே.சிங் உறுதியளித்துள்ளதாக எஃப்ஐஏ ஜார்ஜியா தலைவர் டாக்டர் வாசுதேவ் படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். “இது மிகவும் நல்ல பரிந்துரைதான். அட்லாண்டா பகுதிக்கு உடனடியாகத் தேவைப்படும் கோரிக்கை இது. இதற்கு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று வி.கே.சிங் உறுதியளித்ததாக வாசுதேவ் படேல் கூறியுள்ளார்.

ஜார்ஜியா மாகாணப் பகுதியில் சுமார் 2 லட்சம் இந்திய வம்சாவளியினர் குடியிருப்பதாகவும் எஃப்ஐஏ ஜார்ஜியா மதிப்பிடுகிறது. அரசு ஆதரவளிக்கும் பட்சத்தில், ரூ.50,000 கோடி கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் பொதுத் துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அமெரிக்க வாழ் இந்தியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018