மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

காவிரி ஆணையம்: மேகதாட்டுக்கு கடும் எதிர்ப்பு!

காவிரி ஆணையம்: மேகதாட்டுக்கு கடும் எதிர்ப்பு!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்துவரும் நிலையில், அதில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அணை கட்டுவதற்காக முதற்கட்ட ஆய்வுகள் நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆணையத்தின் அனுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு கோரியுள்ள நிலையில், விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று (டிசம்பர் 3) டெல்லி சேவா பவனில், ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. அதில் மேகதாட்டுவில் அணை கட்டும் ஆய்வுக்கான அனுமதிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டுவருகிறது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “மேகதாட்டு விவகாரம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதிக்கு எங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி பாசன மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மீறுவதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகள், அதிலிருந்து மீள்வதற்குள் மேகதாட்டு அணை அனுமதி விவகாரம் என்பது அவர்களை பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் தமிழக மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் உள்ளனர். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காவிரி நீர் கிடைக்காதோ என்ற ஐயமும் அவர்களுக்கு உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018