மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

காதலே காதலுக்கு எதிரி!

காதலே காதலுக்கு எதிரி!

பிக் பாஸ் மூலம் உருவான வரவேற்பைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அதிக விமர்சனங்களைச் சந்தித்த ஐஸ்வர்யா சமீபத்தில் தனது சகப் போட்டியாளர் மகத் உடன் இணைந்து புதிய படத்தில் இணைந்தார். காமெடி ஜானரில் தயாராகும் அந்தப் படத்தை பிரபு ராம்.சி இயக்குகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஆரியுடன் இணைந்து நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தை ராஜ மித்ரன் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு ஆதி கதாநாயகனாக நடித்த அய்யனார் திரைப்படம் வெளியானது. ஆரி- ஐஸ்வர்யா முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

படம் குறித்து பேசிய ஆரி, “1960, 70களில் காதலுக்கு மிகப் பெரிய எதிரியாக மதம் இருந்தது. 80களில் காதலுக்கு சாதி பிரச்சினையாக இருந்தது. 90களில் குடும்பங்கள் காதலர்களை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டும் சூழல் நிலவியது. ஆனால் இப்போது காதலுக்கு காதல் தான் பிரச்சினையாக உள்ளது. பிரிந்து போவதற்கும் விவாகரத்துக்கும் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள். இருவரும் அளவுக்கு அதிகமாகக் காதலை வெளிப்படுத்தினாலும் ஏதேனும் ஒரு பிரச்சினை அல்லது பல பிரச்சினைகள் அவர்களைச் சண்டையிட வைத்துவிடுகிறது. இருப்பினும் காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அதையே ஐஸ்வர்யாவின் கதாபாத்திரமும் எனது கதாபாத்திரமும் பேசும். படம் ஒவ்வொருவரையும் தங்கள் காதலை நினைத்துப் பார்க்க வைக்கும்” என்று கூறியுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018