மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

மாற்றுத் திறனாளிகள்: கலைஞர் போட்ட அரசாணை என்னாச்சு?

மாற்றுத் திறனாளிகள்: கலைஞர் போட்ட அரசாணை என்னாச்சு?

இன்று (டிசம்பர் 3) மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் சமூக நலத்துறை அமைச்சருக்கு முக்கிய கேள்வி ஒன்றை முன் வைத்திருக்கிறார் திமுக எம்.பி. கனிமொழி.

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் மகளிரணி சார்பில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு (டிசம்பர் 2) இரவு நடந்தது. திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் சிறப்புரையாற்றினார் கனிமொழி.

அப்போது, “சமூக நலத்துறை அமைச்சர், ‘நாங்கள் மாற்றுத் திறனாளிக்கு செய்திருக்கும் நன்மைகளைப் பற்றி விவாதிக்கத் தயாரா?’ என்று கேட்டிருக்கிறார். நிறைய வேண்டாம் ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன்.

2008 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது ஓர் அரசாணை பிறப்பித்தார். அதன் எண் 151. மாற்றுத் திறனாளிகள் இரண்டு வருடங்கள் அரசுப் பணியில் இருந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 2008ல் கலைஞர் பிறப்பித்த அரசாணை. இது 2018. இன்றுவரை அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சி இருக்கிறதா?” என்று கேட்ட கனிமொழி,

“ ஒரு மாற்றுத் திறனாளி படித்து, முன்னுக்கு வருவது எவ்வளவு கஷ்டம்? வாழ்க்கையை போராட்டமாக எடுத்துக் கொண்டு முன்னேறும்போது அவர்களுக்கு நேசக் கரம் நீட்டியவர் தலைவர் கலைஞர். ஆனால், கலைஞர் 2008 இல் போட்ட அரசாணையை 2018 வரை நிறைவேற்றாத அரசாங்கம் இது. மக்கள் மீது அக்கறை கிடையாது. எதைப் பற்றியும் கிடையாது” என்று வேதனைப்பட்டார்.

டெல்டாவுக்கு 353 கோடி, பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடியா?

மேலும், “கஜா புயலில் டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். லட்சணக்கான வீடுகள், தென்னைமரங்கள், பயிர்கள் அழிந்துவிட்டன. இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு போட்ட பிச்சை வெறும் 353 கோடி ரூபாய்தான். ஆனால் குஜராத்திலே ஒரு சிலை வைக்கிறார்கள். பெரிய சாதனை செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

டெல்டாவில் பசியால் துடித்துக் கொண்டிருக்கக் கூடிய, வாழ்வாதாரங்களை இழந்து நிற்கக் கூடிய மக்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் தொகை 353 கோடி. ஆனால் அந்த சிலையை அமைப்பதற்காக மத்திய அரசு செலவழித்திருக்கும் தொகை மூன்றாயிரம் கோடி. இதுதான் மத்திய அரசு தமிழகத்துக்கு தரக் கூடிய மரியாதையா? தமிழக மக்களுக்கு மத்திய அரசு தரும் பரிசா?

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 3 டிச 2018