மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

வெற்றிடமா? ரஜினிக்கு திருமா, சீமான் பதில்!

வெற்றிடமா? ரஜினிக்கு திருமா, சீமான் பதில்!

நாட்டுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார் என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.O திரைப்படம் இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா டுடே இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். சினிமா, அரசியல் குறித்து அதில் பகிர்ந்துகொண்டுள்ள ரஜினிகாந்த், மோடி குறித்த கேள்விக்கு, “பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமானவற்றையும் சிறந்தவற்றையும் செய்ய முயற்சி செய்கிறார்” என்று பாராட்டுத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக சென்னை வேப்பேரியில் நேற்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்தியாவிலுள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காகத்தான் பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறார். அவர்களுக்காகத்தான் ஓடிஓடி உழைக்கிறார். நாட்டு மக்களின் வறுமை போகவில்லை, ஊழல் ஒழியவில்லை, கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை. சாதி, மத வெறியர்கள் வெறிக் கூத்தாடுகின்றனர். ஆக, மோடி யாருக்கு உழைக்கிறார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018