மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் ஓஎன்ஜிசி!

தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் ஓஎன்ஜிசி!

ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறு மற்றும் குறு எண்ணெய் நிறுவனங்களைத் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பொதுத் துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்குச் சொந்தமான 149 சிறு குறு நிறுவனங்களைத் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேபினட் செயலாளர் பி.கே.சின்ஹா, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், எண்ணெய் துறை செயலாளர் எம்.எம்.குட்டி, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் ஓஎன்ஜிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஷி சங்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018