மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

இடைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம்தான்: தமிழிசை

இடைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம்தான்: தமிழிசை

“கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால், 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம்தான்” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கலைஞர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், தாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை என்று தினகரன் தரப்பு தெரிவித்துவிட்டது. இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓ.பி.ராவ்த், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, “கஜா புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் 20 தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018